புதுச்சேரியில் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு 3 முறை போட்டியிட்ட தொகுதி, தற்போது மாற்றி வழங்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
புதுச்சேரி மேற்கு மாநில செயலாளரான ஓம்சக்தி சேகர், கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலிலிருந்து நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வந்த நிலையில், தற்போது இவருக்கு உருளையன்பேட்டை தொகுதியை அதிமுக தலைமை ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் நெல்லித்தோப்பில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், அவர் தொகுதியை விட்டு செல்லக் கூடாது என ஓம்சக்தி சேகரின் ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
இதனையடுத்து தலைமைக்குக் கட்டுப்பட்டு உருளையன்பேட்டையில் வெற்றி பெறுவேன் என ஓம்சக்தி சேகர் தெரிவித்தார்.