தேர்தல் முடியும் வரை வேட்பாளர்கள் தங்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்தால், மக்கள் அவர்களை நிரந்தரமாக ஆப் செய்து விடுவார்கள் என்று டி.ஆர் பாலு அறிவுறுத்தியுள்ள நிலையில், ஆவடி திமுக வேட்பாளர் சா.மு. நாசரோ, தனது கோபத்துக்குள்ளானவர்கள் தன்னை மன்னித்து விடும் படி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதை செய்தாலும் கெத்தாக செய்யும் தில்லான திமுக வேட்பாளர் ஆவடி சா.மு. நாசர்..! வேட்பு மனுதாக்கலின் போது தனக்கு தெரிந்த பத்திரிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்காததற்கு தனது எதிர்ப்பை தேர்தல் அதிகாரியிடம் நேரடியாக பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் நாசர்..!
முன்னதாக நடந்த கூட்டணி கட்சியினருடனான தேர்தல் ஆலோசனை கூட்டத்தில், தான் அதிகம் கோபப்படுபவன் கட்சியினர் பலர் தனது கோபத்துக்கு ஆளாகி இருக்கின்றனர் என்ற சா.மு. நாசர் திமுகவின் தேர்தல் வெற்றிக்காக அவர்களிடம் காலை தொட்டு மன்னிப்பு கேட்பதாக பகிரங்கமாக அறிவித்தார்
அதே போல ஆதரவாளர்கள் புடைசூழ பேரணியாய் வேட்புமனுதாக்கல் செய்ய வந்த மதுரவாயல் திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதியை போலீசார் வாசலில் தடுத்து நிறுத்த, 6 பேர் மட்டும் வரலாம் என்று ஆள் தேர்வு செய்து அவருடன் வந்தவர் உள்ளே அழைக்க, போலீசாரோ 3 பேர் மட்டுமே அனுமதி என்று மூவரையும் உள்ளே அனுப்பி வைத்தனர்
அதே போல குன்றத்தூரில் நடந்த திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டத்தில் ஒவ்வொரு வேட்பாளரின் கழுத்திலும் ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது, அபோது அவர்களிடையே பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்களிடம் வெற்றியின் ரகசியங்களை சொல்லிக் கொடுத்ததோடு, வேட்பாளர்கள் தேர்தல் முடியும் வரை தங்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யக்கூடாது எனவும் அதையும் மீறி செல்போனை சுவிட்ச் ஆப் செய்தால், மக்கள் அவர்களை ஆப் செய்து விடுவார்கள் என்று எச்சரித்து அறிவுரைகளை வழங்கினார்