கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேட்பு மனு தாக்கல் செய்தார். மாநகராட்சியின் மத்திய மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சிவசுப்பிரமணியனிடம் கமல் வேட்பு மனுவை வழங்கினார்.
வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் வியூகமே நேர்மை தான் என பெருமிதம் தெரிவித்தார். கோவை தெற்கு தொகுதியை மற்ற தொகுதிகளுக்கும் முன்மாதிரியாக மாற்றி காட்டுவேன் எனவும் கமல்ஹாசன் உறுதியளித்தார்.
கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் வானதி சீனிவாசனும், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமாரும் களமிறங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.