தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடத்தப்படாத உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவாகத் தேர்தல் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உள்ளாட்சித் தேர்தல் குறித்த வினாவுக்குப் பதிலளித்த அவர், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பது தான் தங்கள் நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.
இதுவரை தேர்தல் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் எந்தக் காரணம் கொண்டும் கலைக்கப்படாது என்றும், மீதமுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவாகத் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.