அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோவிலூர், திட்டக்குடி, கோவை தெற்கு, விருதுநகர் ஆகிய தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது. அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.