அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி தொடர்கிறது.
கும்மிடிப்பூண்டி, திருத்தணி ஆகிய தொகுதிகளை பாமக கேட்பதாகவும், அதில், திருத்தணி தொகுதியை பாஜக தரப்பிலும் கோருவதாகவும் சொல்லப்படுகிறது. இதேபோன்று, அதிமுக செல்வாக்குள்ள செங்கல்பட்டு, திருப்போரூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளை பாமக கேட்பதாகவும், இதில், 2 தொகுதிகள் பாமகவுக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சோளிங்கர் தொகுதியை பாமக கோரியதாகவும், ஆனால், இடைத்தேர்தலில் வென்றுள்ளதால் அதனை வழங்க அதிமுக தயாராக இல்லை என கூறப்படுகிறது. தேமுதிக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், வட மாவட்டங்களில், குறிப்பிட்ட தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் குறைந்துள்ளது.