கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியுடன் நடத்தப்பட்ட 2வது கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.
கொமதேக தரப்பில் 6 தொகுதிகள் கேட்டதாகவும், திமுக தரப்பில் 3 தொகுதிகள் வரை வழங்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், திமுக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்பது குறித்து கட்சியின் ஆட்சிமன்ற குழுவைக் கூட்டி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.