புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணித் தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவு நாளை அல்லது நாளை மறுநாள் தெரியும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்த இரண்டாம் கட்டப் பேச்சு இன்று நடைபெற்றது.
பேச்சுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, இரண்டாம் கட்டப் பேச்சில் விவாதிக்கப்பட்டதை மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவிடம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார். தினேஷ் குண்டுராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியபின் நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு இறுதியாகும் என்றும் தெரிவித்தார்.