கூட்டணி குறித்து மக்கள் நீதி மய்யத்துடன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திமுக உடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில், ஜி.ராமகிருஷ்ணன், டி.கே ரங்கராஜன் உள்ளிட்டோருடன் கே.பாலகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதி பங்கீடு குறித்த 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக இதுவரை அழைப்பு விடுக்கவில்லை என கூறினார்.