தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளார். தேமுதிகவில் கடந்த 25ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விருப்ப மனுவை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், இதுவரை 1800-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில், தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே, விஜயகாந்த் பெயரில் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விஜயகாந்தின் மனைவி, மகனும் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்து நிலையில், விஜயகாந்த் குடும்பத்தில் 3-வது நபராக அவரது மைத்துனர் எல்.கே.சுதீசும் விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.