இந்தியர்களை இழிவுபடுத்துவது ராகுல்காந்திக்கு பிடித்தமான பொழுதுபோக்கு என்று பாரதிய ஜனதா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ஒரு ஆட்சியை தேர்வு செய்யும் வாக்காளர்களின் ஞானத்தை ராகுல்காந்தி மதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் ராகுல்காந்தி நாட்டைப் பிளவுபடுத்துவதாக கூறும் பாஜகவின் குற்றச்சாட்டு எள்ளி நகையாடக்கூடியது என்று கூறிய கபில் சிபல், நாட்டைப் பிளவுபடுத்துவதே பாஜகதான் என்று சாடியுள்ளார்.
ராகுல்காந்தி திருவனந்தபுரத்தில் பேசுகையில், கேரள மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்தி வாக்களிப்பதாக கூறினார். வட இந்திய வாக்காளர்கள் அப்படி இல்லை என்றும் ராகுல்காந்தி கூறியிருந்தார்.