புதுவையை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களை கட்சி சார்பில் குறிப்பிட்டால் அவர்களை தகுதி நீக்க செய்ய வாய்ப்பு உள்ளது என்று அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3 நிமயன எம்.எல்.ஏ.க்களையும் பாரதிய ஜனதா என கூற எந்த முகாந்திரமும் இல்லை என்றார்.
3 பேரும் சட்டரீதியாக கட்சி சார்பில் அங்கீகரிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் இல்லை என்ற அவர், நியமன எம்.எல்.ஏ.க்களை கட்சி ரீதியாக எடுத்து கொள்வது சட்டத்திற்கு புறம்பானது என்றார்.
வாக்களிக்க அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் கூறினாலும் பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்கள் என குறிப்பிடுவது தவறு என்று அவர் தெரிவித்தார்.