சமையல் எரிவாயு விலையை உயர்த்தி மக்களின் பணத்தை அரசு கொள்ளையடிப்பதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து ராகுல்காந்தி டுவிட்டரில் இந்தியில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
அனைவருக்குமான வளர்ச்சியே தாரக மந்திரம் எனக் கூறிக்கொண்டு இருவரின் வளர்ச்சிக்கு மட்டுமே உதவும் வகையில் நாட்டு மக்களிடம் இருந்து அரசு கொள்ளையடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முகேஷ் அம்பானி, கவுதம் அதானி ஆகிய இருவரின் நலனுக்காகவே புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்ததாக ராகுல்காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத் தக்கது.