மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக, 200க்கும் அதிகமான இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
கூச் பீகாரில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பேசிய அவர், ஆட்சிக்கு வந்ததும், முதலில் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளுக்கு மத்திய அரசின் உதவித் தொகை செலுத்தப்படும் என உறுதி அளித்தார்.
மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடுத்து விட்டதாக குற்றம் சாட்டிய அமித் ஷா, மே மாதத்திற்குப் பின்னர் மம்தா பானர்ஜி முதலமைச்சராக இருக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டார்.
மேற்கு வங்கத்தில் அச்சம் நிறைந்த அரசியல் களத்தை மம்தா ஏற்படுத்தி விட்டதாகவும் அமித் ஷா கண்டனம் தெரிவித்தார்.