தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு என்ற சென்னை வாசியின் நீண்ட நாள் ஏக்கம் தீர்ந்ததாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைக்காக சென்னையில் தங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்..
சென்னை கோடம்பாக்கத்திலுள்ள தனது மகள் காந்திமதியின் வீட்டில், கடந்த ஒரு வாரமாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தங்கியுள்ளார்.