சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை தமிழக அரசு இயற்ற வலியுறுத்தியும் சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தனிச்சின்னம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.