பாஜக சார்பில் மேற்குவங்கத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படவில்லை என்றும், தேர்தலுக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் எனவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
மேற்குவங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள பாஜக, மம்தாவுக்கு போட்டியாக தங்கள் கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் என யாரையும் அறிவிக்கவில்லை.
இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், தேர்தலுக்குப் பிறகே இதுபற்றி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.