மம்தா பானர்ஜிக்குத் துணிவிருந்தால் நந்திகிராமில் மட்டும் போட்டியிட வேண்டும் என பாஜகவின் சுவேந்து அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் பவானிப்பூர், நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடப்போவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
கடந்த தேர்தலில் நந்திகிராமில் திரிணாமூல் சார்பில் வெற்றி பெற்று, இப்போது பாஜகவில் சேர்ந்துள்ள சுவேந்து அதிகாரிக்கு எதிராக களம் இறங்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கேஜூரியில் பொதுக்கூட்டத்தில் பேசிய சுவேந்து அதிகாரி, மம்தா இரு தொகுதிகளில் போட்டியிடாமல் நந்திகிராமில் மட்டும் போட்டியிட முடியுமா? என சவால் விடுத்தார்.
நந்திகிராமில் மம்தாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கவில்லை என்றால் தான் அரசியலில் இருந்து விலகிவிடுவதாகவும் சுவேந்து கூறினார்.