மின் வாரியத்தில் நிலக்கரி ஊழல் நடைபெற்றுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதாரமில்லாத, தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் தங்கமணி, வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் வெளியாகும் மத்திய அரசின் அறிக்கையின்படி, தமிழகம் தொடர்ந்து மின் மிகை மாநிலமாக திகழ்ந்து வருகிறது எனக் கூறினார்.