கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திமுக கூட்டணியுடன் இணைந்து தான் வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் நடைபெற்ற கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவையின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த கருத்தினை தெரிவித்தார்.