தேசிய கட்சியான பாஜகவிற்கு எந்தக்கட்சியின் முதுகிலும் ஏறி பயணிக்க வேண்டிய அவசியமில்லை என நடிகை கௌதமி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக சார்பாக நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, பல்வேறு கட்சிகள் கூட்டணி மூலம் ஒன்றிணைந்து பயணிப்பதாக விளக்கமளித்தார்.