பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இனி இல்லை என்ற சூழல் உருவாகி இருப்பதாக அக்கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை -துறைமுகம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தங்கசாலையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், தமிழகத்தில் காலூன்ற முடியுமா? என கேட்டவர்கள், இப்போது பாஜகவின் எழுச்சியை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.