தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை 2 கட்டங்களாக நடத்தக் கூடாது என்றும், ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு துரைமுருகன் பதிலளிக்க மறுத்து விட்டார்.