கல்வி மற்றும் சுகாதாரத்தை முழுமையாக தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்திருந்தால் தாம் அரசியலுக்கு வந்திருக்க போவதில்லை என்று தெரிவித்தார்.
அழகாபுரத்தில் பிரசாரத்தைத் துவக்கிய கமல்ஹாசன், ஏற்காடு கூட்டத்தை முடித்துக்கொண்டு, அங்கு சேர்வராய்ஸ் ஓட்டலில் தோட்ட தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர், அயோத்தியாப் பட்டணம், ரெட்டிபட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கமல்ஹாசன் பங்கேற்றார்.