காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தனிப்பட்ட காரணத்துக்காக ராகுல் காந்தி சில நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்றும் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்பும் இதேபோன்ற பயணத்தை ராகுல் மேற்கொண்டபோது, அவர் இத்தாலியில் உள்ள தமது பாட்டியைக் காணச் சென்றதாக பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது.