தமிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் தமிழக மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாயாக கொடுப்பதுதான் தமிழக அரசியல் என்று பா.ஜ.க மாநில துணை தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து உரையாற்றிய அவர், 2000 ரூபாயை நம்பி 5 ஆண்டு வாழ்க்கையை அடகு வைத்து விடாதீர்கள் என்று பேசினார். பா.ஜ.க விற்கு மக்கள் வாக்களிக்க வில்லை எனில் தலைக்கு மேல் சீரியல் லைட் வைத்திருக்கும் தலைவர்கள், காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள்தான் அரசியல்வாதிகளாக வாய்ப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
அண்ணாமலையின் பேச்சு சர்ச்சையானதை அடுத்து, ஓட்டுக்கு பணம் கொடுப்பதையே தான் குறிப்பிட்டதாகவும், தமிழக அரசின் பொங்கல் பரிசு அறிவிப்பை வரவேற்பதாகவும் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.