காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி தெரிவித்தவர்கள் உள்பட மூத்த தலைவர்கள் 29 பேருடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.
சுமார் 5 மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது. நேற்றைய கூட்டத்தில் மீண்டும் ராகுல் காந்தியே கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பெரும்பாலான மூத்த தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
கட்சி என்ன பொறுப்பை வழங்கினாலும் ஏற்கத் தயாராக இருப்பதாக அப்போது ராகுல் காந்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
கட்சியின் எதிர்காலம் பற்றி விவாதிக்கப்பட்டதாக மூத்த தலைவர் பவன் குமார் பன்சால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.