டார்ச்லைட் சின்னத்தை தங்களுக்கே வழங்கக் கோரி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளது. எம்ஜிஆர் மக்கள் கட்சி என்ற கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கிய அந்த சின்னத்தை மீண்டும் பெறுவது தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கமலஹாசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் அணி மற்றும் மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளனர். டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து டார்ச்லைட் சின்னம் வழங்கப்படாததற்கான காரணம் என்ன என்பது குறித்து நேரில் விளக்கம் கேட்க உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.