தானும், ரஜினியும் இணைவது குறித்து அரசியல்வாதிகள் பயப்படுவதாகவும், ரசிகர்கள் ஏற்றுக் கொள்வதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரையும்மன் துறை, தூத்தூர் மீனவ கிராமங்களில் மீனவ மக்களை சந்தித்த அவர் பேசும்போது, திமுகவோடு கூட்டணி குறித்து உதயநிதி உடன் ரகசிய சந்திப்பு நடத்தியதாக வெளிவந்த தகவல் ஊடகங்களின் யூகம் தான் என்றும் யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார்.