அரசின் நலத்திட்டப் பயன்களை அதிமுகவினர் தாங்களே வழங்குவதுபோல் செயல்படுவதாக மா.சுப்பிரமணியன் கூறும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் 138ஆவது பிறந்த நாளையொட்டிச் சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டு உள்ள உருவப் படத்துக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தி.மு.கவினர் தான் அரசின் திட்டங்களை அவர்கள் கட்சி வழங்குவதுபோல் வழங்குவதாகத் தெரிவித்தார்.