திமுகவினர் அதிமுகவினரை மரியாதையாகப் பேசினால் தாங்களும் மரியாதையாகப் பேசுவோம் எனவும் ஈ.பிஎஸ் மற்றும் ஒபிஎஸ்-ஐ யார் தரக்குறைவாக பேசினாலும், தாமும் தரக்குறைவாகத்தான் பதிலடி கொடுப்பேன் எனவும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளத்தில் தனது உதவியாளர் இல்லத் திருமண நிகழ்வுக்குச் சென்ற அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.