வன்னியர்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க கோரி முதலமைச்சரிடம் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை மனு அளித்தார்.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவருடன் சென்றிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், வன்னியர்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறையில் பின்தங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.