பிரபல நடிகை விஜயசாந்தி மீண்டும் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் எம்பியாக இருந்த அவர் கடந்த பல மாதங்களாக அந்த கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் எதிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் விரைவில் டெல்லி சென்று அமித் ஷா முன்னிலையில் விஜயசாந்தி பாஜகவில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியிலும் விஜயசாந்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.