சேலத்தில் தடையை மீறி, வேல் யாத்திரை செல்ல முயன்றதாக தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சேலம் - குரங்குச்சாவடி பகுதியில் அமைக்கப்பட்ட மேடையில் உரையாற்றிய எல். முருகன், திட்டமிட்டபடி, டிசம்பர் 7 ஆம் தேதி, திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு பெறும் என தெரிவித்தார்.
இதற்கிடையே, தடையை மீறியதாக கூறி, எல். முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.