நாடு முழுவதும் ஒரே நீட் தேர்வு என அறிவித்துவிட்டு மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் தனிநுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ளவும், தனியான இடஒதுக்கீட்டு முறையை செயல்படுத்திக் கொள்ளவும் மத்திய பா.ஜ.க.அரசு அனுமதி வழங்கி இருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளுக்கான இடங்களில் அரசு மருத்துவர்களுக்குப் போராடிப் பெற்ற 50 சதவீத உள்இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்த பின்னரும்,
தமிழக அரசு யாருக்கு பயந்து கலந்தாய்வு நடத்தாமல் காலம் கடத்துகிறது? என கேள்வியெழுப்பி, உடனடியாக அதை நடத்திட வலியுறுத்தியுள்ளார்.