பீகார் தோல்வியை தொடர்ந்து காங்கிரசில் மீண்டும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் தோல்வியை தழுவி வரும் காங்கிரஸ், சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.
அனுபவம் வாய்ந்த, அரசியல் யதார்த்தங்களை புரிந்து கொள்ளக்கூடியவர்களை கட்சியின் தலைமையில் நியமிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எல்லாம் நன்றாக இருக்கிறது என்ற எண்ணத்தில் கட்சி மேலிடம் இருப்பதாகவும் கபில் சிபல் விமர்சித்துள்ளார். ஆகஸ்டில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தங்களது அதிருப்தியை சோனியாவுக்கு கடிதமாக அனுப்பிய 23 மூத்த தலைவர்களில் கபில் சிபலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.