தீபாவளிக்கு பின்னர் பீகார் மாநில முதலமைச்சராக நிதீஷ் குமார் மீண்டும் பொறுப்பு ஏற்பார் என ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாட்னாவின் செய்தியாளர்களிடம் பேசிய அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி.தியாகி, பீகாரின் முதலமைச்சராக நிதீஷ்குமார் தீபாவளிக்கு பின்னர் பொறுப்பு ஏற்பார் என்றார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர்களின் ஒருவரும் துணை முதலமைச்சருமான சுசில் மோடி, பீகாரின் அடுத்த முதலமைச்சராக நிதீஷ் குமார் பதவி ஏற்பார் என்றார்.
கூட்டணியில் எந்த கட்சி எத்தனை தொகுதியில் வென்றுள்ளது என்பது முக்கியமல்ல என்று அவர் குறிப்பிட்டார். பா.ஜ.கவின் வெற்றிக்கு கூட்டணியின் இதர கட்சிகள் துணை புரிந்துள்ளதாக கூறிய அவர், கூட்டணி வெற்றி பெற்றால் நிதீஷ்குமார் தான் முதலமைச்சர் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று என்றார்.