நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது, அ.தி.மு.க. ஆட்சியில் தலைவிரித்தாடும் ஊழலை அம்பலப்படுத்தி உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு 60 விழுக்காடு பணிகள் நிறைவேறிய நிலையில் விபத்து நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏழை எளிய மக்களின் சிகிச்சைக்காகக் கட்டப்படும் மருத்துவமனைகள் உரிய தரமின்றிக் கவனக்குறைவுடன் கட்டப்படுவதற்கு இது சான்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் டெண்டர் முறைகேடுகள் தொடர்பான குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.