மருத்துவ மேற்படிப்பில், நடப்பாண்டில், OBC மாணவர்களுக்கு 50 சதவிகித இடங்களை ஒதுக்க முடியாது என, மத்திய அரசு கூறியிருப்பதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில், ஓ.பி.சி பிரிவினருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீட்டையும் வழங்க முடியாது என மத்திய பாஜக அரசு பிரமாண பத்திரமாக தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.