அதிமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பிருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேசிய அவர், அதிமுக கூட்டணி உறுதியாக உள்ளதென்றும், ஆனால் திமுக கூட்டணி தற்போதே தள்ளாடுகிறது என்றும் கூறினார்.
திமுக கூட்டணியிலுள்ள வைகோ, திருமாவளவன் போன்றோர் மாறுபட்ட வகையில் பேசுவதாகவும், ஆதலால் தேர்தல் நெருங்கும்போது அக்கூட்டணி சிதறிவிடும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.