அதிமுக - பா.ஜ.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை எனத்தெரிவித்த பா.ஜ.க. மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த பிரச்சனையும் இன்றி அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், 2021 சட்டமன்ற தேர்தல் முடிந்து ஆட்சி அமையும் போது, நிச்சயம் அதில் அங்கம் வகிக்கும் கட்சியாக பா.ஜ.க. இருக்கும் என்றும் கூறினார்.