அதிமுகவில் தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் குழுக்களில் முஸ்லிம்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அதிமுக வழிகாட்டுதல் குழுவில் முஸ்லிம்களுக்கு ஏன் பிரதிநிதித்துவம் வழங்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.
திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது வாட் நிலுவைத்தொகையை வாங்கி கொடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
2006ஆம் ஆண்டில் திமுக ஆட்சி முடியும் போது தமிழகத்தின் கடன் தொகை 1 லட்சம் கோடி ரூபாய் என்று கூறிய அமைச்சர், அதற்கும் வட்டி சேர்ந்துதான் தற்போதைய கடன்சுமை நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.