பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடும் 115 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளத்துக்கு 122 இடங்கள், பாஜகவுக்கு 121 இடங்கள் எனத் தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்பட்டது.
ஐக்கிய ஜனதாதளம் தன்னுடைய பங்கில் இருந்து ஜித்தன்ராம் மஞ்சியின் கட்சிக்கு 7 இடங்களை ஒதுக்கியுள்ளது. அவை போக மீதி 115 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அவர்களில் 22 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். இதேபோல் பிற கட்சிகளில் இருந்து அண்மையில் ஐக்கிய ஜனதாதளக் கட்சியில் இணைந்த 10 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.