பாஜக மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சருமான உமா பாரதிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட தகவலை வெளியிட்டுள்ள உமாபாரதி, தற்போது தாம் ஹரித்வார் மற்றும் ரிசிகேஷ் இடையேயுள்ள வந்தே மாதரம் கஞ்ச் எனுமிடத்தில் சுயதனிமைபடுத்தி கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன்னுடன் தொடர்பிலிருந்தோரை கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.