எந்த கட்சிஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்படும் பேரிடரை எதிர்கொள்ள செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையிலுள்ள எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரிடம், வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஜார்ஜ் கோட்டையில் காவி கொடிதான் பறக்கும் என்று எல்.முருகன் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.