திருவனந்தபுரம் எம்பி சசி தரூர், காங்கிரஸ் கட்சியில் கவுரவ நடிகராக இருப்பதாகவும், அவருக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை எனவும் கூறி கட்சியின் மற்றொரு எம்பியான கொடிக்குன்னில் சுரேஷ் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த அவர், கட்சியின் விதிகளுக்கு உட்பட்டு நாடாளுமன்ற அரசியல் செய்ய சசி தரூருக்கு தெரியவில்லை என்றார். எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், தம்மை ஒரு சர்வதேச மனிதராக நினைத்துக் கொண்டு கட்சிக்கு எதிரான செயல்களை சசி தரூர் செய்வதாகவும் கொடிக்குன்னில் சுரேஷ் காட்டமாக விமர்சித்துள்ளார்.
காங்கிரசுக்கு திறமையான முழு நேர தலைவர் வேண்டும் என சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய காங்கிரசின் 22 தலைவர்களில் சசி தரூரும் ஒருவர் என்பதால், கேரள மாநில காங்கிரஸ் செயல்தலைவராகவும் இருக்கும் கொடிக்குன்னில் இப்படி பேசியுள்ளதாக கூறப்படுகிறது.