ஆயுஷ் கூட்டத்தில் இந்தி தெரியாதவர்களை வெளியேற அதிகாரி சொன்னது கண்டனத்திற்குரியது எனவும், ஒரு அரசு அதிகாரி சொன்னது மத்திய அரசின் கொள்கையல்ல எனவும் பாஜகவில் சேர்ந்துள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டை பற்றி நாடாளுமன்றத்தில் பேச தலைவர்கள் இல்லை என்றார். தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் வளர்ச்சி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நீட் தேர்வு வேண்டாம் என்றால் அதற்கு மாற்று என்ன என அண்ணாமலை கேள்வி எழுப்பினார். மத்திய அரசு காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு அநியாயம் செய்யவில்லை என்றார் அவர். இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது எனற் அவர், தமிழுக்கு தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.