நாட்டுக்கு எதிரானவர்கள், நாட்டு நலனில் அக்கறையில்லாதவர்கள் ஆகியோரின் புகலிடமாக திமுக உள்ளதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் காணொலியில் உரையாற்றிய ஜே.பி.நட்டா, வளர்ச்சிக்கு எதிராக உள்ள திமுக, தேசியத்துக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிடுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணையாமல் பிரிந்து கிடப்பதைப் பார்க்க திமுக வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
மக்கள் விழிப்பாக இருந்து, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என நட்டா கேட்டுக்கொண்டார்.