கொரானா காலத்தில் ஒர்க் அட் ஹோம் என்பது போன்று, ஒர்க் அட் மதுரை என கோரிக்கை வைப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்கக் கோரி அமைச்சர் தலைமையில், தென் மாவட்ட தொழில் வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அனைத்து துறைகளும் சென்னையில் உள்ள நிலையில், தென் மாவட்ட மக்கள் சென்னையை நோக்கி செல்வதால் அங்கு இட நெருக்கடி ஏற்படுகிறது என உதயகுமார் கூறினார்.
மதுரையை 2ஆவது தலைநகராக்க வேண்டுகோள் வைப்பதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என்று கூறிய அவர், அமைச்சர் பதவியா? மதுரை நகரின் வளர்ச்சியா என்று பார்த்தால் தனக்கு மதுரையின் வளர்ச்சியே முக்கியம் என்றார்.