வருகிற 20 ஆம் தேதி, திருப்பூரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி துவக்க உள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் கே. எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.
சென்னை - சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 234 சட்டப் பேரவை தொகுதிகளிலும் முதற்கட்டமாக மக்கள் பிரச்னைகள் குறித்து கேட்டறிய இருப்பதாக தெரிவித்தார்.
கொரோனா நிலவரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கே. எஸ். அழகிரி வலியுறுத்தினார்.